450 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் புல்லட் ரயில்: உலகை மிரட்டும் சீனாவின் புதிய சாதனை
சீனாவில் மணிக்கு 450 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகை மிரட்டும் சீனாவின் புதிய சாதனை
சீனா மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்துள்ளது.
சிஆர்450’(CR450) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புல்லட் ரயில், நவீன தொழில்நுட்பங்களின் அதிசயமாக திகழ்கிறது.
இந்த புதிய ரயில் மூலம் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் கணிசமாக குறையும் என சீனா தெரிவித்துள்ளது.
The CR450 high-speed train prototype, with a test speed of up to 450 kilometers per hour and an operational speed of 400 km/h, was officially unveiled in Beijing on Sunday. pic.twitter.com/pcInWMHiR7
— Henry Stoll (@henrystoll) December 29, 2024
சோதனை ஓட்டத்தில் மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தை எட்டிய இந்த ரயில், ரயில்வே துறையில் புதிய மைல்கல்லை ஏற்படுத்தியுள்ளது.
வேகம் மட்டுமல்ல, சகலத்திலும் புதிய உச்சம்
சிஆர்450 ரயில் வேகம் மட்டுமின்றி, எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு, பிரேக் செயல்பாடு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் உலகத் தரத்தை நிர்ணயிக்கிறது.
சீனாவில் ஏற்கனவே மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் சிஆர்400 புல்லட் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சிஆர்450 ரயிலின் வருகை சீனாவின் அதிவேக ரயில் வலையமைப்பை மேலும் வலுப்படுத்தும்.
சீனாவில் 47,000 கிலோமீட்டர் தூரத்துக்கு அதிவேக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரயில்கள் மூலம் தொலைதூர நகரங்களுக்கு பாதுகாப்பாகவும், வசதியாகவும், விரைவாகவும் பயணிக்க முடியும்.
தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் இந்த ரயில், பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |