நிலைமையை மேலும் சிக்கலாக்காமல்..இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா கூறிய வார்த்தை
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை தணிக்க தாங்கள் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியாவின் நட்பு நாடான அமெரிக்கா, இந்த பிரச்சனையில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும், இதனை அணு ஆயுத போராக மாற்ற வேண்டாம் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் மோதலில் சீனா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
லின் ஜியான்
இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில்,
"போர் பதற்றத்தை தணிக்க சீனா தயாராக உள்ளது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையில் நிலவும் தற்போதைய நிலவரம் கவலை அளிக்கிறது. நிலைமையை மேலும் சிக்கலாக்காமல் நிதானம், அமைதி, பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
சர்வதேச சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். சீனாவின் நிலைப்பாட்டை நேற்று இருநாடுகளின் தரப்பிலும் தெரிவித்துவிட்டோம். அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம். உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |