11.1 பில்லியன் டொலர்கள் ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல்: சீனா கொடுத்த பதிலடி
ைவானுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் சீனா 20 நிறுவனங்கள் மீது பொருளாதார தடையை விதித்துள்ளது.
தைவானுக்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கம், தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கும் சுமார் 11.1 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா தொடர்ந்து உரிமை கோரி வரும் நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனா பதிலடி
அமெரிக்காவின் இந்த ஆயுத உதவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் 20 பாதுகாப்பு நிறுவனங்கள் மீது சீனா அதிரடி தடை விதித்துள்ளது.
மேலும் 10 மூத்த நிர்வாகிகள் மீதும் சீனா அரசு இந்த தடைகளை அறிவித்துள்ளது.
அத்துடன் தைவான் விவகாரத்தில் சீனாவை தூண்டிவிடும் எந்தவொரு செயலுக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |