பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க அமெரிக்க சதிதிட்டம்! சீனா பரபரப்பு குற்றச்சாட்டு
சீனாவின் பெய்ஜிங்கில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் குளிர்கால் ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்க அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக சீன குற்றமச்சாட்டியுள்ளது.
குளிர்கால் ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் 2022 பிப்ரவரி 4ம் திகதி தொடங்கயிருக்கிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகள் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால் ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், பெய்ஜிங் குளிர்கால் ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்க அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி China Daily செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை சீனாவின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தவும், போட்டியில் மந்தமாக விளையாடவும், பங்கேற்க மறுக்க வைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு பெய்ஜிங் போட்டியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடும் வீரர்களுக்கு, அமெரிக்க பெரிய தொகையை வழங்கும் மற்றும் மந்தமாக விளையாடும் வீரர்களின் நற்பெயரைப் பாதுகாக்க உதவியாக உலகளாவிய வளங்களைத் அணிதிரட்டும் என China Daily குற்றம்சாட்டியுள்ளது.
China Daily அறிக்கை விளையாட்டை அரசியலாக்குவதற்கும், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் நாசவேலை மற்றும் தலையிடுவதற்கும் சில அமெரிக்கர்களின் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது என சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், விளையாட்டுப் போட்டிகளின் போது சில அமெரிக்கர்கள் விளையாட்டு வீரர்களை வாங்க மற்றும் சிக்கலை ஏற்படுத்த முயற்சிப்பதை தாம் கடுமையாக கண்டிப்பதாக செய்தித் தொடர்பாளர் கூறினார், இந்த முயற்சிகள் தோல்வி அடையும் என்றும் கூறினார்.
சீன குற்றச்சாட்டுகள் குறித்து பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியதாவது, ஒலிம்பிக்கில் பங்கேற்பது தொடர்பான உலகளாவிய பிரச்சாரத்தை அமெரிக்கா ஒருங்கிணைக்கவில்லை என்ற முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.