புலம்பெயர்வோருக்காக ஒன்லைனில் சிறுபடகுகள் விற்பனை: விற்கும் நாடு?
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகள் ஒன்லைனில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
விற்கும் நாடு?
ஆட்கடத்தல்காரர்களுக்காக அந்த படகுகளை விற்கும் நாடு சீனா என்றும் பிரித்தானிய ஊடகமான தி சன் தெரிவித்துள்ளது.
சீனாவிலுள்ள Shandong மற்றும் Zhejiang மாகாணங்களில் இந்த சிறுபடகுகள் தயாரிக்கப்படும் நிலையில், இணையத்தில், அந்த படகுகளை மேற்கு ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதே தங்கள் இலக்கு என படகு தயாரிப்பு நிறுவனங்கள் இணையத்தில் விளம்பரமும் செய்கின்றன.
350 பவுண்டுகளுக்கு விற்கப்படும் 8 மீற்றர் நீளமுடைய அந்த ரப்பர் படகில் 30 பேர் பயணிக்கலாம் என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அத்தகைய ஒரு படகில் இரண்டு மடங்கு புலம்பெயர்ந்தோர் நெருக்கியடித்துக்கொண்டு ஆபத்தான வகையில் பயணம் செய்கிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் இத்தகைய படகுகள் குறித்து ஒன்லைனில் விளம்பரம் செய்த Weihai Yamar Outdoors Product Co என்னும் சீன நிறுவனம் மீது பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தடைகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |