அமெரிக்காவின் வரியை தவிர்க்க சீனா செய்த செயல் -அம்பலப்படுத்திய தென்கொரியா
அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்கா - சீனா வர்த்தக போர்
அதன்படி, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வரிவிதிப்பை அமல்படுத்தினார். பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீதான வரியை உயர்த்தியது.
மேலும், அமெரிக்கா அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க சீன விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது.
இதனையடுத்து, சீன பொருட்களுக்கான வரியை 245 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். இவ்வாறு இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்தது.
இந்நிலையில் கூடுதல் வரி விதிப்பை தவிர்க்க, சீன நிறுவனங்கள் தென் கொரியா பெயரில் தங்கள் பொருட்களை அனுப்புவதை தென்கொரியா சுங்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கண்டுபிடித்த தென்கொரியா
சீனாவில் தயாரிக்கப்படும் நிறுவனங்களை தென் கொரியாவிற்கு அனுப்பி, அங்கிருந்து "Made in Korea" என்ற பெயரில் அமெரிக்காவிற்கு அனுப்புவதை, தென்கொரியா சுங்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 20.81 மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் வேறு நாட்டில் தயாரித்து "Made in Korea" என பெயரிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் 97% பொருட்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கொரியா சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், 13.6 மில்லியன் டொலர் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள், சீனாவில் இருந்து தென் கொரியாவிற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து, "Made in Korea" என பெயரிடப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தென் கொரிய சுங்க அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளுக்கிடையேயான கூட்டு விசாரணை முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக ஒரு சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில், "அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாகவும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டதாக உள்ள தென் கொரியாவை, வரிகள் மற்றும் விதிமுறைகளைத் தவிர்ப்பதற்கான வழியாக, சீனா போன்ற நாடுகள் பயன்படுத்த முயற்சிப்பது அதிகரிக்கும் எனவும், டிரம்ப் ஆட்சி தொடங்கியதில் இருந்தே சீன நிறுவனங்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும்" தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படும் இந்த முயற்சிகளைத் தடுக்க சிறப்பு குழுவை தென் கொரியா தொடங்கியுள்ளது. மேலும், உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |