புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனா., இந்தியா கவலை
பாதுகாப்பு நடவடிக்கையாக சீனா புதிய மாவட்டத்தை (County) உருவாக்கியுள்ளது.
சீனா, தனது சின்ஜியாங் மாகாணத்தில் “Cenling” எனப்படும் புதிய மாவட்டத்தை உருவாக்கியுள்ளது.
இது கராகோரம் மலைத்தொடர் அருகிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை அருகிலும் அமைந்துள்ளது.
இந்த நடவடிக்கை, வகான் காரிடார் வழியாக உள்நுழையும் உய்கூர் போராளிகளைத் தடுக்கவும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Cenling, காஷ்கர் பிராந்திய நிர்வாகத்தின் கீழ் செயல்படும். காஷ்கர், பழமையான “சில்க் ரோடு” நகரமாகவும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (CPEC) தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு, சீனா Hean மற்றும் Hekang மாவட்டங்களை உருவாக்கியபோது, அவை இந்தியாவின் லடாக் பிராந்தியத்துடன் ஒட்டியிருந்ததால், இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.
Cenling கவுண்டியும், அதேபோல் ஆக்சாய் சின் பிராந்தியத்துடன் தொடர்புடையதாக இருப்பதால், இந்தியா மீண்டும் கவலை தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை, எல்லைப் பகுதிகளில் அடிப்படை நிர்வாகத்தை வலுப்படுத்தும் முயற்சி என நிபுணர்கள் கூறுகின்றனர். “இது சீனாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் ஆட்சித் திறனை வலுப்படுத்தும் முயற்சி” என்று ஷாங்காய் Fudan பல்கலைக்கழக பேராசிரியர் Lin Minwang தெரிவித்துள்ளார்.
மேலும், East Turkestan Islamic Movement (ETIM) போராளிகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வகான் காரிடார் வழியாக சின்ஜியாங் மாகாணத்திற்குள் நுழைவதைத் தடுக்கவும், Cenling கவுண்டி உருவாக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#China #PoK #Afghanistan #BorderSecurity #Xinjiang #CPEC #IndiaChinaTensions