சீனாவின் பெட்ரோ கெமிக்கல் ஆலையில் பயங்கர வெடிப்பு விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்!
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு விபத்தில் குறைந்தபட்சம் ஒருவராவது இறந்து இருக்கலாம் என சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஷாங்காய் (Shanghai) மாகாணத்தில் உள்ள சினோபெக்கின் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் (Sinopec's petrochemical complex) எத்திலீன் கிளைகோல் ஆலை பகுதியில் அதிகாலை 4 மணியளவில் தீ வெடிப்பு விபத்து ஏற்பட்டது என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கில் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜின்ஷான், ஃபெங்சியான் மாவட்ட தீயணைப்பு குழு மற்றும் நகரின் இரசாயன தொழில் பூங்கா தீயணைப்பு குழு ஆகியவை விபத்து ஏற்பட்ட இடத்திற்கு உடனடியாக அனுப்பட்டு மீட்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதாக ஷாங்காய் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
A very strong explosion took place at a petrochemical plant in #Shanghai, #China. pic.twitter.com/4bHHsKp1ds
— NEXTA (@nexta_tv) June 18, 2022
அத்துடன் காலை 9 மணி நிலவரப்படி தீ வெடிப்பு கட்டுக்குள் கொண்டுவர பட்டுவிட்டதாக சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்த தீ வெடிப்பு விபத்தில் குறைந்தபட்சம் ஒருவராவது உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: மூன்று பேரை சுட்டுக் கொன்ற ராணுவம்: பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேல், பாலஸ்தீனியம்
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக தொழில்முறை விபத்துகள் அதிகரித்து, உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் பொது பாதுகாப்பு குறித்த கவலைகள் எழத் தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.