35 வயதாகியும் திருமணம் ஆகவில்லை: தாய் செய்த செயலால் மகள் வருத்தம்
தன் மகளுக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகாததால், தன் வயதுள்ள ஒருவரை மகளுடன் சேர்த்துவைக்க முயன்றுள்ளார் ஒரு பெண்.
தனக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகாததால், 50 வயதைக் கடந்த ஒருவரை தனக்கு திருமணம் செய்துவைக்கும் நோக்கில், தங்களை சந்திக்க வைக்க தன் தாய் முயன்றதாக வருத்தப்படுகிறார் சீனப் பெண்ணொருவர்.
தாய் செய்த செயலால் மகள் வருத்தம்
சீனாவில் கல்வியாளர் மற்றும் சுற்றுலா வழிகாட்டியாக பணி புரிந்துவரும் லிங்லாங் என்னும் இளம்பெண்ணுக்கு 35 வயதாகியும் திருமணம் ஆகவில்லை.
மகளுக்கு திருமணம் ஆகாததால் கவலையடைந்த அவரது தாய், சமீபத்தில் தன் மகள் ஒரு நபரை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்.

விடயம் என்னவென்றால் அந்த நபருக்கு வயது 50ஐக் கடந்துவிட்டது. அதாவது தான் தனியாக இருப்பதால், எப்படியாவது தனக்குத் திருமணம் செய்து வைத்துவிடவேண்டும் என்பதற்காக, தன் தாய் தன்னை அந்த நபரை சந்திக்க வைத்ததாக தெரிவிக்கிறார் லிங்லாங்.
என் தாய்க்கு 55 வயதாகிறது, கிட்டத்தட்ட அவரது வயதில் உள்ள ஒருவரை எனக்குத் திருமணம் செய்துவைக்க முயற்சிக்கிறார் என் தாய். 35 வயது என்பது அவ்வளவு அதிகமா என கவலையுடன் கேட்கிறார் லிங்லாங்.
சமூகம்தான் என் போன்றவர்களைப் புரிந்துகொள்ளவில்லை, மோசமாகப் பேசுகிறது என்றால், என் பெற்றோரே என்னைப் புரிந்துகொள்ளமாட்டேன்கிறார்களே என்பதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது என்கிறார் அவர்.
நான் கடினமாக உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன், சுதந்திரமாக இருக்கிறேன், எனக்கு 25 வயது இல்லை என்பது உண்மைதான். அதற்காக, தனிமையாக இருப்பதால் ஏற்படும் பயத்தைத் தவிர்ப்பதற்காக மட்டுமே ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள நான் தயாரில்லை என்கிறார் லிங்லாங்.
எனக்கான சரியான நபரை நான் எப்போது சந்திப்பேன் என்பது எனக்கே தெரியாது, என்றாலும், அதற்காக, தனியாக வாழ பயமாக உள்ளது என்பதற்காக ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதைவிட, நான் தனியாகவே இருந்துவிட்டு போகிறேன் என்கிறார் லிங்லாங்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |