சீனாவை உலுக்கும் சிஸ்டர் ஹாங் - 1600 ஆண்களை பெண் வேடமிட்டு ஏமாற்றிய நபர்
1600 க்கும் அதிகமான ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ள சிஸ்டர் ஹாங் விவகாரம் சீனாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சிஸ்டர் ஹாங் விவகாரம்
பொதுவாக சமூக வலைத்தளங்களில், மோசடி செய்யவோ, பொழுதுபோக்கிற்கோ பெண்களின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் போலியாக ஒரு கணக்கை உருவாக்கி ஆண்கள் பயன்படுத்துவது உண்டு.
அதே போல், சீனாவில் ஒரு நபர் செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
சீனாவின் நான்ஜிங்கை சேர்ந்த 38 வயதான Jiao என அழைக்கப்படும் நபர், லிப்ஸ்டிக், விக், மற்றும் பெண் உடை அணிந்து தன்னை திருமணமான ஒரு பெண் போல் காட்டிக்கொண்டு, Sister Hong(சிஸ்டர் ஹாங்) என்ற பெயரில் சமூகவலைத்தளம் மற்றும் டேட்டிங் செயலிகளில் போலியான கணக்கு ஒன்றை திறந்துள்ளார்.
இதில், தனக்கு பணம் எதுவும் செலுத்தாமல் ஆண்கள் தன்னுடன் உல்லாசமாக இருக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை நம்பி, கல்லூரி மாணவர்கள் தொழில் வல்லுநர்கள், வெளிநாட்டினர் என 1600 க்கும் அதிகமானோர் அவரின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
உல்லாசம் அனுபவிக்க அங்கு வந்த ஆண்களை அவர்களுக்குத் தெரியாமல் நிர்வாணமாக வீடியோ எடுத்து, சமூகவலைத்தளங்களில், 150 யுவானுக்கு(இந்திய மதிப்பில் ரூ.1821) விற்பனை செய்துள்ளார்.
ஏமாந்த 1600 ஆண்கள்
இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், காவல்துறையினரை அவரை கைது செய்துள்ளனர்.
இந்த வீடியோக்களில் உள்ள சில ஆண்களை அடையாளம் கண்டுள்ள அவர்களின் மனைவிகள் விவாகரத்து கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நான்ஜிங் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC), சிஸ்டர் ஹாங் விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு இலவச சுகாதார பரிசோதனைகளை வழங்குகிறது. இதில், 3 பேருக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம், சீனாவின் சமூகவலைத்தளங்களில், 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் ஹேஷ்டேக் டிரெண்டுகளில் முதலிடத்தில் உள்ளது.
இணையத்தில் வெளியான வீடியோக்களை நீக்கி வரும் காவல்துறையினர், தனியுரிமையை கருத்தில் கொண்டு அதை பகிர வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |