அமெரிக்கா விதித்த சுங்க வரிகளுக்கு சீனா கடும் எதிரிப்பு
பீஜிங்கில் சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா சமீபத்தில் விதித்த புதிய சுங்க வரிகள் நியாயமற்றவை என்றும், “பாதுகாப்பு வாதம்” (Protectionism) சார்ந்தவை என்றும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஜூலை 24, 2026 அன்று, 60 நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு 10 சதவீதம் மற்றும் 12.5 சதவீதம் சுங்க வரிகளை விதித்தது. இதில் சீனாவிற்கு 12.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
கட்டாய உழைப்பால் (Forced Labour) பொருட்கள் தயாரிக்கப்பட்டதன காரணமாக இந்நாடுகளுக்கு இந்த வரியை விதித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கு சீனா, “இது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை. அமெரிக்கா மீண்டும் Section 301 விசாரணையைத் தொடங்கி, ‘கட்டாய உழைப்பு’ என்ற பெயரில் சுங்க வரிகளை விதித்துள்ளது. இது முற்றிலும் அநியாயமானது” என தெரிவித்துள்ளது.
இந்த சுங்க வரிகள் உலக வர்த்தக ஒழுங்கை பாதிக்கும் அபாயம் உள்ளதாக சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும், அமெரிக்கா தனது உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவே இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது என்றும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலைமை, சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்யும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே, இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் வர்த்தக மோதல்களை சந்தித்து வருகின்றன. புதிய சுங்க வரிகள், உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
சீனா, “அமெரிக்கா உடனடியாக இந்த சுங்க வரிகளை ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |