திடீரென அறுந்த தொங்கு பாலத்தின் கேபிள்: ஐவர் மரணம்..அதிர்ச்சி வீடியோ
சீனாவில் தொங்கு பாலத்தின் கேபிள் அறுந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தொங்கு பாலம்
வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ளது இலி கசாக் என்ற தன்னாட்சி மாகாணம்.
இங்கு கடந்த 6ஆம் திகதி, இங்குள்ள சுற்றுலாப் பகுதியில் தொங்கு பாலத்தின் கேபிள் திடீரென அறுந்து விழுந்தது.
இதில் பலர் கீழே விழுந்ததில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அத்துடன் அரசு பணிக்குழு ஒன்றை விபத்து பகுதிக்கு அனுப்பியதாகவும் கூறியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |