இதற்குள் சீனா நமது முழு நாட்டையும் ஆக்கிரமிக்கும்! பிரபல நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவுடனான இராணுவ உறவு மோசமடைந்துள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சர் Chiu Kuo-cheng தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நான்காவது நாளாக சீனா அதன் இராணுவ ஜெட் விமானங்களை தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி பறக்கவிட்டு மிரட்டி வருவதற்கு மத்தியில் தைவான் பாதுகாப்பு அமைச்சர் Chiu Kuo-cheng இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தைவான் தன்னை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக கருதுகிறது. இருப்பினும், சீனா தைவானை பிரிந்திருக்கும் தனது மாகாணமாக கருதுகிறது.
தைபேயில் ஏவுகணைகளை மற்றும் போர்க்கப்பல்களை உருவாக்க பல பில்லியன் டொலர் பாதுகாப்பு செலவு மசோதா குறித்து நாடாளுமன்றக் குழு பரிசீலித்த போது உரையாற்றிய தைவான் பாதுகாப்பு அமைச்சர் Chiu Kuo-cheng, 2025-க்குள் முழு நாட்டையும் ஆக்கிரமிக்கும் திறன் தற்போது சீனாவிற்கு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், வேறு பல விஷயங்களை கருத்தில் கொண்டு சீன போரை எளிதில் தொடங்காது.
தைவான் ஜலசந்தியில் misfire-க்கான ஆபத்து இருப்பதாகவும் Chiu Kuo-cheng கூறினார்.