புடின் ஒரு பைத்தியம்! போரில் ரஷ்யா தோல்வியடையும்- கடுமையாக சாடிய சீனா
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினை பைத்தியம் என சீன அதிகாரிகள் சாடியுள்ளனர்.
உக்ரைன் போரில் ரஷ்யாவின் நிலை
ரஷ்ய படைகள் உக்ரைனில் தொடர்ச்சியான பின்னடைவை சந்தித்து வருகின்றது. கிழக்கு உக்ரைன் நகரமான சோலேடரில் கடுமையான சண்டையில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அதேபோல் மாஸ்கோவை மோசமாக்கும் வகையில், முன் வரிசையில் உள்ள ரஷ்யப் படைகளுக்கு ஏவுகணைகளை வழங்குவதை ஈரான் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
புடினை சாடிய சீன அதிகாரிகள்
இந்த நிலையில் பல சீன அதிகாரிகள் ரஷ்ய ஜனாதிபதி புடினை பைத்தியம் என்று சாடியுள்ளனர். அத்துடன் உக்ரைன் போரில் ரஷ்யா தோல்வியடையும் என்றும், மோதலில் இருந்து ஒரு சிறு சக்தியாக வெளிவரும் என்றும் பெய்ஜிங் நினைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
@Evgeny PAULIN/SPUTNIK/AFP
மேலும், வெறுமனே ரஷ்யாவைப் பின்பற்றக் கூடாது என்றும், உக்ரைனில் நடக்கும் புடினின் காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பை கண்டிக்கும் வகையில், உக்ரைனை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும் என்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ரஷ்யாவின் பொருளாதாரம் குறைந்து உலக அரங்கில் மோசமான நிலைப்பாட்டைக் காணும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய ஜனாதிபதியை சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் நேரடியாக எச்சரித்தார்.
@Getty Images