மொத்தமாக முடக்கப்படும்... தைவான் தொடர்பில் பிரதமர் ஸ்டார்மரை மிரட்டும் சீனா
தைவானை சொந்தமாக்கும் முயற்சியில் சீனாவை பிரித்தானியா ஆதரிக்க வேண்டும் என பிரதமர் ஸ்டார்மரை அந்த நாடு அச்சுறுத்தி வருகிறது.
சீனாவுக்குச் சொந்தமானது
பிரித்தானியா உடனான இராஜாங்க உறவுகளைத் துண்டிக்கும் நிலை வரும் என்றே சீனாவின் அச்சுறுத்தலாக உள்ளது. பிரித்தானியாவிற்கான சீன தூதர் Zheng Zeguang தெரிவிக்கையில்,

இரு நாடுகளுக்குமான சுமூக உறவு நீடிக்க வேண்டும் என்றால், தைவான் ஒருபோதும் ஒரு நாடாக இருந்ததில்லை என்றும், தைவான் சீனாவுக்குச் சொந்தமானது என்றும் பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், 1972 ஆம் ஆண்டு சீனாவுடன் இராஜாங்க உறவுகள் நிறுவப்பட்டபோது, தைவானின் மீதான சீனாவின் உரிமையைப் பாதுகாக்க பிரித்தானியா ஒரு தெளிவான உறுதிப்பாட்டை முன்னெடுத்ததாக ஜெகுவாங் கூறிப்பிட்டுள்ளார்.
அந்த ஒப்பந்தத்தை தற்போதைய ஸ்டார்மர் அரசாங்கம் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் நினைவூட்டியுள்ளார். தைவான் மீதான சீனாவின் உரிமைகோரலை பிரித்தானியா நீண்ட காலமாக ஒப்புக்கொண்டுள்ளது, ஆனால் இதுவரை அதை ஆதரிக்கவில்லை.
தைவான் என்பது 1949 முதல் சீனாவால் தனித்து ஆளப்படும் 23 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு ஜனநாயகப் பகுதி என்றே அந்த நாடு கருதுகிறது. மேலும் அதை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு பலத்தைப் பயன்படுத்துவதையும் சீனா நிராகரிக்கவில்லை.

மட்டுமின்றி, கிட்டத்தட்ட தினமும் அந்த தீவுக்கு அருகில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்புவதன் மூலம் சீனா தைவான் மீது இராணுவ அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது.
முறியடிக்கப்பட வேண்டும்
கடும் நெருக்கடிக்கு மத்தியிலும், தைவானின் ஜனாதிபதி லாய் சிங்-டே மற்றும் அவரது ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியானது சீனாவின் அழுத்தங்களை நிராகரித்து வருகின்றனர்.
மேலும் தைவான் ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும், அதன் எதிர்காலத்தை அதன் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர். ஆனால், ஜெகுவாங் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு பதிலளித்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Tom Tugendhat,

ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானம் 2758 தைவான் மீது ஆதிக்கத்தை வழங்குகிறது என்ற கருத்து உட்பட, சர்வதேச சட்டத்தை சிதைக்க சீனாவின் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டும் என்றார்.
இவை தைவான் மக்கள் தீர்மானிக்க வேண்டிய விடயங்கள். மற்றவர்களை அடிபணியச் செய்ய பொருளாதார வற்புறுத்தலைப் பயன்படுத்துவது அதை சட்டப்பூர்வமாக்காது என்றார்.
பிரித்தானியாவில் சீன உளவாளிகள் விவகாரம் மற்றும் முக்கியமான தரவுகளை அணுக வாய்ப்பாக அமையும் என்ற அச்சம் காரணமாக லண்டனில் உள்ள சீனத் தூதரகக் கட்டுமானப் பணியை நிறுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களுக்கு மத்தியிலேயே ஜெகுவாங் அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |