ட்ரம்பின் வரி விதிப்புகள்... ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாயும் சீனா
உலக நாடுகள் பலவற்றில் ட்ரம்பின் வரி விதிப்புகள் ஏற்படுத்தியுள்ள நடைமுறை பிரச்சினைகளைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாய சீனா முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாயும் சீனா
சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங், உறவுகளை மேம்படுத்தவும், உரசல்கள் மற்றும் வேறுபாடுகளை முறையாகக் கையாளவும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரி விதிப்புகளால் உலக வர்த்தகத்தின் நிலையற்ற தன்மை அதிகரித்துவரும் நிலையில், சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 50ஆவது ஆண்டு விழா நேரத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அமெரிக்கா குறித்து ஜி ஜின்பிங் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அமெரிக்காவுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் பெரும்பாலான பொருட்கள் மீது ட்ரம்ப் வரி விதித்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்காக, ஐரோப்பாவுடன் நெருங்கிய பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை உருவாக்குவதில் சீனா ஆர்வம் காட்டிவருகிறது.
இந்நிலையில், ஆரோக்கியமான, நிலையான சீன - ஐரோப்பிய ஒன்றிய உறவுகள், இரு தரப்புக்கும் நன்மை பயப்பது மட்டுமின்றி, உலகத்துக்கும் நன்மையை உருவாக்கும் என்று கூறியுள்ளார் ஜி ஜின்பிங்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |