மேலும் 9 நாடுகளின் குடிமக்களுக்கு Visa இல்லா அனுமதி அளிக்கும் சீனா
நார்வே மற்றும் பின்லாந்து உட்பட 9 நாடுகளின் குடிமக்களுக்கு Visa இல்லா அனுமதி அளிக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
9 நாடுகளின் குடிமக்கள்
எதிர்வரும் 8ம் திகதி முதல், தென் கொரியா, நார்வே, பின்லாந்து உட்பட, ஸ்லோவாக்கியா, டென்மார்க், ஐஸ்லாந்து, அன்டோரா, மொனாக்கோ மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய 9 நாடுகளின் குடிமக்களுக்கு சீனா Visa இல்லா அனுமதி அளிக்கும்.
இவர்கள் சீனாவில் தொழில் ரீதியாகவும், சுற்றுலா, குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் பொருட்டு அல்லது சீனா வழியாக Visa இன்றி 15 நாட்களுக்குள் வேறு நாடுகளுக்கு பயணப்படவும் அனுமதி அளிக்கிறது.
18 ஐரோப்பிய நாடுகளுக்கு
சீன அரசாங்கத்தின் இந்த முடிவானது 2025 டிசம்பர் 31ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டென்மார்க், கிரீஸ், போர்த்துகல் உட்பட 18 ஐரோப்பிய நாடுகளுக்கு சீனா Visa இல்லா அனுமதி அளித்திருந்தது.
கடந்த ஜூலை மாதம், போலந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் 2025 இறுதி வரை சீனாவிற்கு தடையின்றி நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |