தைவான் தொடர்பில் ஜப்பான் கருத்தை ஆதரிக்கிறோம்... சீனாவிற்கு அமெரிக்கா பதிலடி
தைவான் தொடர்பான ஜப்பானின் கருத்தால் வர்த்தக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ள நிலையில், ஜப்பானுக்கு அமெரிக்கா ஆதரவு கரம் நீட்டியுள்ளது.
கடும் விளைவுகளை
சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று சீன வர்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அத்துடன், தைவான் விவகாரத்தில் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி தமது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அல்லது கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
ஜப்பான் தரப்பு தனது நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு தவறான பாதையில் சென்றால், சீனா தேவையான நடவடிக்கைகளை உறுதியாக எடுக்கும், மேலும் அனைத்து விளைவுகளுக்கும் ஜப்பானே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சீன வர்த்தக அமைச்சக செய்தித்தொடர்பாளர் He Yongqian உறுதிபட தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஜப்பானின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக சீனா உள்ளது, 2024 ஆம் ஆண்டில் சுமார் 125 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஜப்பானிய பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
சீனா ஜப்பானிய பொருட்களுக்க்கான இறக்குமதியை தவிர்த்தால், ஜப்பான் மாற்று சந்தைகளைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படக்கூடும். ஜப்பானின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி இலக்காக தென் கொரியா உள்ளது.

நாங்கள் ஆதரிப்போம்
கடந்த ஆண்டு 46 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான சீனா, அதன் அண்டை நாடுகளுக்கு எதிராக கட்டாய வர்த்தக நடவடிக்கைகளை எடுப்பதில் சாதனை படைத்துள்ளது.
2023ல், ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்க நீரை பசிபிக் பெருங்கடலில் வெளியேற்ற ஜப்பான் முடிவு செய்ததை அடுத்து, அனைத்து ஜப்பானிய கடல் உணவுகளின் இறக்குமதிக்கும் சீனா முழுமையான தடையை விதித்தது.

2010ல், சென்காகு தீவுகளுக்கு அருகே கடலோர காவல்படை கப்பல்களுடன் மோதியதற்காக ஒரு சீன மீன்பிடி மாலுமியை ஜப்பானிய அதிகாரிகள் கைது செய்ததைத் தொடர்ந்து, ஜப்பானுக்கான அரிய மண் ஏற்றுமதியை சீனா ஏழு வாரங்களுக்கு தடை செய்தது.
இந்த நிலையில், சீனாவை கடுமையாக சாடியுள்ள அமெரிக்கா, ஜப்பானிய கடல் உணவுகளுக்கு சீனா 2023ல் தேவையற்ற தடை விதித்தபோது அமெரிக்கா ஜப்பானுக்கு ஆதரவாக நின்றது,
தைவான் விவகாரம் உட்பட இந்த முறையும் ஜப்பானை நாங்கள் ஆதரிப்போம் என ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ஜார்ஜ் கிளாஸ் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |