சீனாவிற்கு அடித்த ஜாக்பாட் - 1000 மெட்ரிக் டன் தங்கம் கண்டுபிடிப்பு
சீனாவில் மிகப் பாரிய அளவிலான தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் பகுதியில் 1000 மெட்ரிக் டன் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் 78 பில்லியன் யூரோ (600 பில்லியன் யுவான்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
2,000 மீட்டர் ஆழத்தில் 300 டன் தங்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 3,000 மீட்டர் ஆழத்தில் கூடுதல் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில கற்கள் ஒரு டன்னுக்கு 138 கிராம் தங்கம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மிக உயர்ந்த அளவாகும்.
இந்த கண்டுபிடிப்பு 3D நிலவியல் மாதிரிகள், ஆழமான துளையிடல் மற்றும் புவியியல் படிமங்கள் போன்ற உயர் தொழில்நுட்பங்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இப்பகுதியில் கூடுதல் வளங்கள் இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு ஹுனான் மாகாணத்தை முக்கிய தங்க சுரங்க மையமாக மாற்றும் வாய்ப்பு உள்ளது.
சீனா ஏற்கெனவே உலகின் மிகப்பாரிய தங்க உற்பத்தியாளராக இருக்கும் நிலையில், இந்த வளம் அதன் உலகளாவிய தாக்கத்தை மேலும் உயர்த்தும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China gold discovery 2025, Deep-earth gold deposit, Hunan gold mine, 78 billion Euro gold reserve, Wangu gold field China, Largest gold deposit China, Geological breakthrough China, Gold mining technology China, China gold production 2025, Environmental impact gold mining