அதிநவீன ஆயுதங்களை முதல்முறையாக உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ள சீனா
சீனா அதன் அதிநவீன ஆயுதங்களை முதல்முறையாக உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
சீனா, இரண்டாம் உலகப்போரின் முடிவை நினைவுகூரும் வகையில், 2025 செப்டம்பர் 3-ஆம் திகதி பெரும் இராணுவ அணிவகுப்பை பீஜிங்கில் நடத்தவுள்ளது.
இது 1945-ஆம் ஆண்டு ஜப்பான் சரணடைந்ததை நினைவுகூரும் 80-வது ஆண்டு விழாவாகும்.
இந்த நிகழ்வில், சீனா தனது புதிய, மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களை உலகிற்கு முதன்முறையாக காண்பிக்கப்படவுள்ளன.
இந்த அணிவகுப்பில், மக்கள் விடுதலைப் படையின் (PLA) நூற்றுக்கணக்கான விமானங்கள், போர் விமானங்கள், பாம்பர்கள் மற்றும் நிலத்திலிருந்து இயங்கும் புதிய இராணுவ உபகரணங்கள் இடம்பெறவுள்ளன.
அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படும் அனைத்து ஆயுதங்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை மற்றும் தற்போது சேவையில் உள்ளவை.
இதில் Wing Loong என்ற நீண்ட நேரம் பறக்கும் ட்ரோன்கள், ட்ரோன்களை அழிக்கக்கூடிய சாதனங்கள் பொருத்தப்பட்ட இராணுவ வாகனங்கள், புதிய எச்சரிக்கை விமானங்கள் போன்றவை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் நடக்கவுள்ள இந்நிகழ்வில், ரஷ்ய ஜனாதிபதி புடின் உள்ளிட்ட வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China military parade 2025, advanced Chinese weapons, WWII 80th anniversary Beijing, Xi Jinping Victory Day, DF-26 missile China, hypersonic weapons China, Wing Loong drone parade, Chinese fighter jets 2025, Putin China parade visit