பிரித்தானியாவில் உளவு பார்க்க மாணவர்களை கட்டாயப்படுத்தும் சீனா
பிரித்தானியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில், பயிலும் சீன மாணவர்கள் மூலம் சீன அரசு உளவு பார்ப்பதாக UK-China Transparency (UKCT) என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் மூலம் உளவு
இந்த அறிக்கையில், பிரித்தானியா பல்கலைக்கழகங்களில் பயிலும் சீன மாணவர்கள் தங்கள் நண்பர்களைக் கண்காணிக்க கட்டாயப்படுத்துவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கொரோனா தோற்றம், சின்ஜியாங்கில் உய்குர் முஸ்லிம்கள் மீதான அணுகுமுறை, சீனத் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மீதான விமர்சனங்கள் போன்ற அரசியல் விவாதங்களைக் கவனிக்க வலியுறுத்துகின்றனர்.
அவ்வாறு உளவு பார்க்க மறுக்கும் மாணவர்கள் சீன அதிகாரிகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினருக்கு தொல்லை
மேலும், அவர்கள் பிரித்தானியாவில் இருப்பதால் அவர்களை ஒன்றும் செய்ய இயலாது என்பது சீனாவில் உள்ள அவர்களின் குடும்பத்தினருக்கு தொல்லை அளிப்பதாக கூறப்படுகிறது.
சீன அரசு நிதியுதவி பெறும் மொழி மற்றும் கலாச்சார மையமான கன்ஃபியூசியஸ் இன்ஸ்டிட்யூட்கள் பிரித்தானியாவின் முக்கிய பல்கலைக்கழகங்களுக்குள் அமைந்துள்ளது.
சீனா குறித்த பிம்பத்தை மாற்ற இந்த மையங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கு உள்ள சீன அறிஞர் ஒருவர், உங்களை நாங்கள் கண்காணிக்கிறோம் என நேரடியாகவே கூறியதாக பிரித்தானிய பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கல்வி சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை வலியுறுத்தும் புதிய உயர்கல்வி சுதந்திரச் சட்டம் பிரித்தானியாவில் கடந்த வாரம் அமுலுக்கு வந்தது.

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால் கைது செய்து திருப்பி அனுப்பும் திட்டம்: சில நாட்களில் அமுல்
இதன்படி, பேச்சு சுதந்திற்கு அச்சுறுத்தலாக உள்ள உறவுகளை துண்டிக்குமாறு பல்கலைக்கழங்களை பிரித்தானிய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஆனால், சீன மாணவர்களின் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான பவுண்டுகளை கருத்தில் கொண்டு, இந்த சீன தலையீடு பிரச்சினையை தீர்க்க பல்கலைக்கழங்கள் தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் எச்சரிக்கை
இந்த சட்டத்தின் கீழ் கன்ஃபியூசியஸ் இன்ஸ்டிட்யூட்கள் விசாரிக்கப்படும் என கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜாக்கி ஸ்மித், "பிரித்தானியாவில் தனிநபர்களை மிரட்ட, துன்புறுத்த அல்லது தீங்கு விளைவிக்க ஒரு வெளிநாட்டு அரசின் எந்தவொரு முயற்சியும் பொறுத்துக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளார்.
ஆனால், இதனை மறுத்துள்ள லண்டனில் உள்ள சீன தூதரகம், "இந்த அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் அபத்தமானது. சீனா எப்போதும் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை கடைபிடித்து வருகிறது.
மேலும் பிரித்தானியா மற்றும் பிற நாடுகளில் பேச்சு சுதந்திரம் மற்றும் கல்வி சுதந்திரத்தை மதிக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் உட்பட அதன் குடிமக்கள் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று சீனா தொடர்ந்து கோருகிறது"என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |