எச்சரிக்கையை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்: 'பதிலடி கொடுப்போம்' சீனா உறுதி..
எச்சரிக்கையை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பெலோசி தைவானுக்கு சென்றதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என சீனா உறுதியாக கூறியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தைவானில் வந்திறங்கிய நிலையில், சீனாவிடமிருந்து அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.
எச்சரிக்கையை மீறி அவர் சென்றுள்ள நிலையில், அமேரிக்கா “நெருப்புடன் விளையாடுகிறது” என்று சீனா எச்சரித்தது. மேலும், சீன இராணுவம் "இலக்கு இராணுவ நடவடிக்கைகளை" தொடங்கவுள்ளவதாக உறுதியளித்துள்ளது.
Image: Malaysian Department of Information/Nazri Rapaai/Handout
நான்சி பெலோசியின் வருகையில் கண்டித்து சீனா வெளியிட்ட அறிக்கையில், "சீன மக்கள் விடுதலை இராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது, இதை எதிர்கொள்ளவும், தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைத் உறுதியாகப் பாதுகாக்கவும், வெளிப்புறத் தலையீடுகள் மற்றும் 'தைவான் சுதந்திரம்' பிரிவினைவாத முயற்சிகளை உறுதியாக முறியடிக்கவும் இலக்கு இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கும்" என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வு கியான் கூறினார்.
Image: Famer Roheni / AFP - Getty Images