இது எங்களுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு சமம்! இதை மட்டும் செய்யாதீங்க...அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!
அமெரிக்கா, தைவான் அரசு இராணுவ ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து சீனா வெளிப்படையாக எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு சிறிய தீவு நாடான தைவானை சீனா தனது தேசிய பாதுகாப்புச் சட்டம் மூலமாக முழுவதுமாக ஆக்கிரமிக்க நினைத்தது.
இதன் காரணமாக, ஜனநாயக நாடான தைவானில் அவ்வப்போது சீனா அத்துமீறி வந்தது. அவ்வப்போது தைவான் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றுடன் சீன வீரர்கள் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தனர்.
சீனாவின் இந்த அத்துமீறலில் இருந்து தப்பிக்க தைவான் அப்போது அமெரிக்காவின் உதவியை நாடியது. அதன் படி அமெரிக்காவும், தைவானுடன் பல்வேறு பாதுகாப்பு ஒபந்தங்களில் ஈடுபட்டது.
சில தினங்களுக்கு முன்பு பிரித்தானியாவில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டிலும் தைவான் ஜலசந்தியில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுவதற்கு தடையாக உள்ள சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது,
இதையடுத்து தற்போது, அமெரிக்கா தைவான் இடையே இராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியான நிலையில், தைவானுக்கும் வேறு எந்தவொரு நாட்டுக்கும் இடையே இராணுவ ஒப்பந்தம் செய்ய சீனா எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்கா தைவான் அரசுடன் இராணுவ ஒப்பந்தம் மேற்கொள்வது சீனாவுக்கு எதிராக போர்த் தொடுப்பதற்கு ஈடாகும்.
எனவே, ஒன்றிணைந்த சீனா என்ற கோட்பாட்டை மதிக்குமாறும் அமெரிக்காவுக்கு சீனா எச்சரித்துள்ளது.