சுவிட்சர்லாந்து தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்லும் தன் நாட்டவர்களுக்கு பயண எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது சீனா.
சீனா வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி
சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்லும் சீனர்கள், ஜெனீவா, சூரிக் மற்றும் லோசான் முதலான நகரங்களுக்குச் செல்லும்போது கவனமாக இருக்குமாறு சீன அரசு வலியுறுத்தியுள்ளது.

சமீப காலமாக, சுவிட்சர்லாந்தில் சிறு திருட்டுகள் போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் முதலான இடங்களில் திருடர்கள் சுற்றுலாப்பயணிகளைக் குறிவைக்கக்கூடும் என சீன அரசு வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்துக்குச் செல்லும் சீன சுற்றுலாப்பயணிகள் கவனமாக இருக்குமாறும், விலையுயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறும், வாகனங்களை அணுகுவோர் மற்றும் உதவி செய்வதாகக் கூறுவோரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் சீனா அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |