காமெனி மீதான தாக்குதல் குறித்து எச்சரித்த சீனா - நடந்தது என்ன?
காமெனி மீதான தாக்குதல் குறித்து சீனா முன்னதாக தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது.
காமெனி மீதான தாக்குதல் குறித்து சீனா வழங்கிய தகவல்
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

முதல் தாக்குதலிலே ஈரானின் உச்சத் தலைவர் கொல்லப்பட்டது ஈரானுக்கு பாரிய பின்னடைவாக கருதப்பட்டாலும், ஈரான் இடைக்கால தலைமையை தேர்வு செய்து, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், போர் தொடங்கும் முன்னதாகவே ஈரானுக்கு சக்தி வாய்ந்த ரேடார்கள் மற்றும் சைபர் உதவிகளை சீனா வழங்கியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இஸ்ரேல் விமானங்கள் கிளம்பியதில் இருந்து அது எப்போது ஈரானை வந்ததடையும் என்பது குறித்த துல்லியமான தகவல்களை இரண்டரை மணி நேரத்திற்கு முன்னதாகவே சீனா ஈரானுக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த தகவல்களை ஈரான் உதாசீனப்படுத்தியதா அல்லது அந்த தகவல் ஈரானின் தலைமைக்கு செல்லாமல் ஈரான் அதிகாரி யாரும் தடுத்துள்ளாரா, ஈரானின் தலைமையின் அருகே ஏதேனும் கருப்பு ஆடு உள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து IBC தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்வில் நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |