மோதலைத் தூண்ட வேண்டாம்... இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை
புதிதாகக் குழுக்களை உருவாக்கி மோதல்களைத் தூண்டும் நாடுகள் மக்களிடையே செல்வாக்கற்றவை என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அச்சுறுத்தல்
கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் நிலவும் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்தே சீனா எச்சரித்துள்ளது.

செவ்வாயன்று இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சந்தித்தபோது, குவாட் எனப்படும் கூட்டமைப்பின் வெளிவிவராக அமைச்சர்கள், சீனாவைத் தெளிவாக ஆனால் வெளிப்படையாகக் குறிப்பிடாமல்,
தென் சீனக் கடலில் இராணுவ விமானங்களின் அபாயகரமான சூழ்ச்சிகளையும், மோதித் தடுக்கும் நடவடிக்கைகளையும் விமர்சித்திருந்தனர்.
ட்ரம்பின் பகீர் திட்டம்... எபோலா பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் ஆப்பிரிக்க நாடொன்றிற்கு அனுப்பப்படும் அபாயம்
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும், ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் அல்லது ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு அமைச்சர்கள் தங்கள் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், குவாட் கூட்டமைப்பைச் சந்தேகத்துடன் பார்க்கும் சீனா, புதன்கிழமை அன்று அந்தக் கவலைகளை நிராகரித்ததுடன், அதன் கடல்சார் விவகாரங்களில் தலையிடுவதற்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்தது.

விரும்பத்தகாத செயல்
மேலும், வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், தற்போதைய நிலையில், கிழக்குச் சீனக் கடல் மற்றும் தென் சீனக் கடலில் உள்ள சூழல் ஒட்டுமொத்தமாக நிலையாகவே உள்ளது என்று தெரிவித்தார்.
மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நாடுகள் சீனாவைச் சுற்றியுள்ள கடல்சார் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தி, அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பதற்கான பிராந்திய நாடுகளின் முயற்சிகளை உண்மையாக மதிக்க வேண்டும் என்றார்.

அத்துடன், குழுக்களை அமைப்பது, பதற்றத்தை உருவாக்குவது மற்றும் மோதல்களைத் தூண்டுவது ஆகியவை விரும்பத்தகாத செயல்களாகும் எனவும் மாவ் நிங் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களின் பெரும் பகுதிகள் மீது சீனா உரிமை கோருவதோடு, இன்றியமையாத கப்பல் போக்குவரத்துப் பாதைகளாக விளங்கும், கடும் போட்டி நிலவும் இந்த நீர்வழிகளில் பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் பிற நாடுகளுடன் அடிக்கடி தகராறுகளிலும் ஈடுபட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |