இதற்கு பதிலடி கொடுப்போம்... ஐரோப்பிய நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை
தைவான் அமைச்சரின் வருகைக்கு பதிலடி கொடுப்பதாக ஐரோப்பிய நாடுகளான ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தைவான் இறையாண்மை மிக்க தனி நாடாக தன்னைக் கருதுகிறது. ஆனால் தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற பிராந்தியமாக சீனா தைவானைப் பார்க்கிறது.
தைவானின் மூத்த அதிகாரிகள் மற்ற நாடுகளுக்கு செல்வதால் சீனா எப்போதும் கோபமடைகிறது.
தைவான் அதிகாரிகளை வரவேற்பதின் மூலம், மற்ற நாடுகள் தைவான் தன்னை தனி நாடு என கூறுவதற்கு ரகசிய ஆதரவாக தருவதாக சீன கருதுகிறது.
இந்நிலையில். அடுத்த வாரம் தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் Joseph Wu, ஐரோப்பிய நாடுகளான ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்ததொடர்பாளர் Wang Wenbin, நாங்கள் Joseph Wu-வின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருகிறோம்.
தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியாக பாதுகாக்க, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசுக்கு எதிராக சரியான மற்றும் தேவையான நடவடிக்கைகளை சீன எடுக்கும், யாரும் எந்தவிதமான மாயையையும் கொண்டிருக்கக்கூடாது என Wang Wenbin கூறினார்.