ஆசிய நாடொன்றிற்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா., சீனா கடும் கண்டனம்
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், தைவானுக்கு 2 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்ததை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்தும் ஆபத்தான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
"சீனா தனது தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்று சீனா அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தைவானின் வெளியுறவு அமைச்சகமும் ஆயுதங்கள் விற்பனைக்கு பதிலடி கொடுத்தது.
"சீனாவின் அச்சுறுத்தல்களை அடுத்து தாய்நாட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. தைவான் நாட்டின் ஒரு பகுதி என்று பெய்ஜிங் நீண்டகாலமாக கூறி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. 153 சீன ராணுவ விமானங்கள் சமீபத்தில் நாட்டைச் சுற்றி பறந்ததாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது படைகளை போருக்கு தயாராகுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |