ஹார்முஸில் எங்கள் கப்பல்கள் இடைமறிக்கப்பட்டால்.,அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியில் சீன கப்பல்கள் மீது அமெரிக்கா கை வைக்க வேண்டாம் என்று சீனா அரசு எச்சரித்துள்ளது.
ஈரானிய துறைமுகங்களை முடக்கும் அமெரிக்கா
பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஈரானிய துறைமுகங்களை திங்கட்கிழமை முதல் முடக்க போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு கட்டணம் செலுத்தி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணம் செய்யும் அனைத்து கப்பல்களையும் இடைமறிக்க அமெரிக்க படைகளுக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சீனா கடும் எச்சரிக்கை
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீனாவின் 40% எண்ணெய் இறக்குமதியும், 30% இயற்கை எரிவாயு தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.
அமெரிக்கா அறிவிப்பின் படி சீன வணிக கப்பல்கள் முடக்கப்பட்டால் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சீனா எதிர்கொள்ள நேரிடும்.
எனவே அமெரிக்காவின் முற்றுகை அறிவிப்புக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, மேலும் தங்களுடைய கப்பல் போக்குவரத்தில் தலையிட வேண்டாம் என்றும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீன பாதுகாப்பு துறை அமைச்சர் அட்மிரல் டாங் ஜூன், தங்களுடைய வணிக கப்பல்கள் ஹார்முஸ் வழியாக பயணங்களை மேற்கொண்டு வருகின்றன, இது எங்கள் உள்நாட்டு விவகாரம், இதில் யாரும் தலையிட கூடாது என்று எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்க படைகள் தங்களின்(ஈரானின்) துறைமுகங்களை இடைமறித்து அச்சுறுத்தினால் பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடாவில் துறைமுகங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்காது என்று ஈரான் எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |