ஈரானை தாக்குவது தொடர்பில் அமெரிக்காவுக்கு மற்றொரு நாடும் எச்சரிக்கை
ஈரான் மீது ’பலத்தை பிரயோகிப்பது’ தொடர்பில், அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Guo Jiakun என்பவர், ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், எவ்வகையிலாகிலும், அமெரிக்கா பலத்தைப் பிரயோகிப்பது, ஈரானுடைய இறையாண்மையையும் பாதுகாப்பையும் மீறுவதாக கருதப்படும் என்று கூறியுள்ளார்.
மற்ற நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் எந்த நடவடிக்கையையும் சீனா எதிர்க்கிறது என்று கூறியுள்ள அவர், அத்துடன், சர்வதேச உறவுகளில் பலத்தை பிரயோகிப்பது அல்லது அது தொடர்பில் அச்சுறுத்துவதையும் சீனா எதிர்க்கிறது என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஈரானைத் தாக்குவது தொடர்பில் ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ள நிலையில், தற்போது சீனாவும் அமெரிக்காவை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |