கோமாவிற்கு சென்ற நபர் - பல ஆண்டுகளாக காலை கடித்து கணவரை மீட்ட மனைவி

China
By Karthikraja Jul 11, 2026 01:06 PM GMT
Report

கோமாவிற்கு சென்ற கணவரின் காலை பல ஆண்டுகளாக கடித்து அவரது மனைவி அவரை சுயநினைவுக்கு வரவைத்துள்ளார்.

கோமாவிற்கு சென்ற நபர்

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் நீர் புகா தடுப்புப் பணியாளரான(waterproofing worker) ஜாவோ ஜின்கியான்.

2019 அக்டோபரில், சிக்கிக்கொண்டிருந்த 3 வயதுக் குழந்தையை மீட்பதற்காக, ஜாவோ ஒரு கிடங்கின் கூரை மீது ஏறி, குழந்தையைத் தன் கைகளில் ஏந்தியபடி, சுமார் 6 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இருவரும் தரையில்  விழும்போது, ​​தன் உடலால் அக்குழந்தையைப் பாதுகாத்தார். 

கோமாவிற்கு சென்ற நபர் - பல ஆண்டுகளாக காலை கடித்து கணவரை மீட்ட மனைவி | China Wife Wakes Coma State Husband By Biting Toes

அதில் குழந்தை பாதுகாப்பாக காப்பாற்றப்பட நிலையில், ஜாவோ தலைகீழாகக் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் கடுமையான காயங்களும் பல எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளது.

ஜாவோ கண்விழிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு எனவும், அவர் உயிர் பிழைத்ததே ஒரு அதிசயம் எனவும் மருத்துவர்கள்தெரிவித்தனர்.

ஜாவோவின் மனைவியான, மழலையர் பள்ளி கலை ஆசிரியையான 45 வயதான சோங் மே, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வீட்டிலேயே இலவசமாக ஓவியம் வரையும் வகுப்புகளைக் கற்பித்து வந்தார். 

மனிதர்களுக்கு பதிலாக 100 ஆடுகளை வேலைக்கு அமர்த்திய கார் நிறுவனம்

மனிதர்களுக்கு பதிலாக 100 ஆடுகளை வேலைக்கு அமர்த்திய கார் நிறுவனம்

கணவரை முழு நேரமாக கவனித்து கொள்வதற்காக தனது வேலையை விட்டுள்ளார். குடும்பத்தின் சேமிப்பு விரைவாக தீர்ந்த நிலையில், இணையத்தில் ஓவியங்களை விற்க தொடங்கியுள்ளார்.

பல ஆண்டுகளாக காலை கடித்த மனைவி

நரம்பு மீட்சிக்கு உதவுவதற்காக ஜாவோவின் விரல்களையும், கால்விரல்களையும் தூண்டுமாறு மருத்துவர்கள் அவரது மனைவிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஜாவோவின் கால்விரலைக் கடித்தபோது, தற்செயலாக ​​ஒரு மெல்லிய எதிர்வினையைக் கவனித்த அவர், அப்போது முதல் ஜாவோவின் பாதத்தை ஒரு நெகிழிபையால் மூடி, பல ஆண்டுகளாக கால்விரல்களைத் தொடர்ந்து கடித்து வந்துள்ளார்.

இதன் விளைவாக 2024 ஆம் ஆண்டில் ஜாவோ தனது கண்களைச் சிறிதளவு திறக்கத் தொடங்கியுள்ளார். ஆனால் பேசவோ நகரவோ முடியாவில்லை.

அவருக்காக தினமும் பாட்டு பாடுவார். மேலும் பல ஆண்டுகளாக அவரை கவனித்து கொள்வதற்காக இரவில் 4 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்கியுள்ளார்.

அதன்பின்னர், ஜாவோவால் பேச்சைப் புரிந்துகொள்ளவும், பதிலுக்குக் கையை உயர்த்தவும், உதவியுடன் சிறிது நேரம் எழுந்து நிற்கவும் முடிந்தது.

கடந்த ஜூன் 30 ஆம் திகதி, மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோது, ​​ஜாவோ தன் மனைவியிடம் திரும்பி, “சாங் மே, i love you” என்று கூறியுள்ளார்.

எழுத்துப் பயிற்சியின் போது, ​​ஜாவோவால் தன் மனைவியின் பெயரைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் எழுத முடியவில்லை.

முன்னதாக சமூகவலைத்தளத்தில், "முன்னால் இருக்கும் பாதை கடினமானது என்று எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் கணவன் மனைவி இருவரும் கஷ்டங்களை ஒன்றாகச் சமாளிக்கவே படைக்கப்பட்டவர்கள்.

அதற்கான சிறந்த தீர்வு எனக்குத் தெரியாது. ஆனால் இத்தனை நீண்ட ஆண்டுகளையும் கடந்து செல்ல நான் தயாராக இருக்கிறேன்" என்று எழுதியிருந்தார்.

மீட்கப்பட்ட குழந்தையின் தந்தை தன்னிடம் போதிய வசதிகள் இல்லாத நிலையிலும், ஜாவோவின் சிகிச்சைக்காக அவர் 45,000 யுவானை (இந்திய மதிப்பில் ரூ.6.30லட்சம்) கடனாக திரட்டி வழங்கியுள்ளார்.

சாங் மேவின் அர்பணிப்புக்காக இந்த நிகழ்வு, சீன சமூக ஊடங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US