தைவான் மீதான ராணுவ உரிமையை சீனா கைவிடாது: ஜனாதிபதி ஜி ஜின்பிங் அதிரடி அறிவிப்பு
தைவான் மீது படைகளை பயன்படுத்துவது சீனாவின் உரிமை.
தைவான் ஜலசந்தியில் பொருளாதார மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை ஊக்குவிக்க தயார்.
தைவான் மீது படைகளை பயன்படுத்தும் உரிமையை சீனா ஒருபோதும் கைவிடாது என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
குடியரசு தைவானை சீனா தனது சொந்த பிரதேசமாக கருதுவதாகவும், முறைப்படி தைவான் சீனாவிற்கு சொந்தமான நிலப்பரப்பு என்று சீனா தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
மேலும் சீனா, காங்-ஹாங்கில் கடைப்பிடித்து வரும் ஒரே நாடு இரண்டு அமைப்புகள் என்ற முறையை தைவானிற்கும் வழங்குவதாக அறிவித்தது, ஆனால் அதற்கு தைவானின் முக்கிய அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சீனாவின் முன்மொழிவை நிராகரித்தனர்.
இதற்கிடையில் தீவு நாடான தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் மற்றும் அமெரிக்க நிபுணர்கள் குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, தைவான் ஜலசந்தி பகுதியில் சீனா திவீரமான போர் பயிற்சியினை அறிவித்தனர்.
ஆனால் தற்போது இரு பிராந்தியங்களுக்கு இடையிலான போர் பதற்றம் சற்று தணிந்து காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தைவான் மீது படைகளை பயன்படுத்தும் உரிமையை ஒரு போதும் சீனா கைவிடாது என தெரிவித்தார்.
அத்துடன் தைவான் ஜலசந்தியில் பொருளாதார மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை ஊக்குவிப்பதில் சீனா ஆர்வமாக இருப்பதாகவும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
மேலும் தைவானின் பிரச்சனைகளை தீர்ப்பது சீன மக்களின் சொந்த வேலை, அதனை சீன மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: இளவரசர் பிலிப் மற்றும் பென்னி இடையிலான தவறான காட்சிகள்: கொடூரமான குப்பை என ராணியின் செயலாளர் கண்டனம்
அரங்கம் அதிர பேசிய ஜி ஜின்பிங், தனது உரையின் போது கிட்டத்தட்ட 73 முறை பாதுகாப்பு (safety and security) என்று குறிப்பிட்டார்.