மீண்டும் சீனாவில் கொரோனாவின் விஸ்ரூபம்! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
சீனாவில் முதல் முறையாக கொரோனா என்ற வைரஸ் உலகையே கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை புரட்டிப் போட்ட பெருந்தொற்று, கடந்த 6 மாதங்களாகதான் சற்று அடங்கியிருந்தது.
இதனால் உலக மக்களும் கொரோனா அச்சத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் விஸ்பரூம் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் பெய்ஜிங்கில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரே நாளில் 2,097 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இது ஒப்பீட்டளவில் குறைவானதாக தெரிந்தாலும், சீனாவில் கடந்த ஏப்ரல் மாத உச்சத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும் என சொல்லப்படுகின்றது.
கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி காணப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.
அதுமட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர்.
மேலும் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் காய்ச்சல் மருந்தான ஐபுபுரூஃபென் மற்றும் குளிர்கால மருந்துகள், கொரோனா பரிசோதனை உபகரணங்களை சீனர்கள் அவசரமாக வாங்கி குவிக்கின்றனர்.
குளிர் மற்றும் காய்ச்சல் மருந்துகள், விட்டமின்கள், வலி நிவாரணிகளை மக்கள் வாங்கிக் குவிப்பதால் பெரும்பாலான மருந்துக்கடைகளில் அவை முற்றிலுமாக தீர்ந்துவிட்டன. அவற்றை அடுக்கும் அலமாரிகள் காலியாக இருக்கும் புகைப்படங்களும் வைரலாகுகின்றன.
தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பு வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
GETTY IMAGES