பணியை ராஜினாமா செய்துவிட்டு…முழுநேர மகளாக இருக்க பெண்ணுக்கு மாதம் ரூ 47,000 வழங்கும் பெற்றோர்
பெற்றோர் ஒருவர் மாதம் 47,000 ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து, சீனாவில் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய பெற்றோருக்கு முழுநேர மகளாக செயல்பட தொடங்கியுள்ளார்.
பெற்றோர் வழங்கிய சலுகை
மாத செலவுக்காக 4000 யுவான்(தோராயமாக 47,000 ரூபாய்) தருவதாக பெற்றோர் ஒருவர் தங்களுடைய மகளுக்கு வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனத்தின் தகவல் படி, அந்த பெண்ணின் பெயர் நியானன்(Nianan, 40 years old), இவர் சீனாவில் செய்தி நிறுவனம் ஒன்றில் 15 ஆண்டுகளாக பணி புரிந்து வந்துள்ள நிலையில், அவரது நீண்ட அனுபவம் காரணமாக அவரது பணியில் வேலை பளுவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
SCMP composite
இதை கவனித்த நியானன் பெற்றோர் வேலையை விட்டுவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் மகள் நியானனை பொருளாதார ரீதியாக கவனித்து கொள்வதாகவும், செலவிற்காக மாதம் 4000 யுவான்கள் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.
பெற்றோர்களின் இந்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்ட நியானன், உடனடியாக அவரது வேலையை ராஜினாமா செய்து விட்டு அவரது பெற்றோருக்கு முழுநேர மகளாக செயல்பட தொடங்கியுள்ளார்.
பெற்றோருடன் தினசரி நாள் பயணம்
இந்நிலையில் தன்னுடைய பெற்றோருடனான தினசரி நாள் பயணம் குறித்த தகவல்களை நியானன் பகிர்ந்துள்ளார்.
Shutterstock
அதில் தினமும் காலை ஒரு மணி நேரம் பெற்றோர் உடன் நடனம் ஆடுவேன், பின் அவர்களுடன் இணைந்து வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க கடை விதிகளுக்கு செல்வேன், அத்துடன் மாலை வேலையில் அவர்களுடன் இணைந்து சமைத்து சாப்பிடுவேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய பெற்றோருடன் நேரத்தை இவ்வாறு கழிப்பது தன்னுடைய மன அழுத்தத்திற்கான மிகப்பெரிய சிகிச்சை என்றும் நியானன் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் தனக்கு பிடித்த வேலை கிடைத்தால் எப்போது வேண்டுமானாலும் அதை பின் தொடரலாம் என்றும் நியானன் பெற்றோர் அவரிடம் கூறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.