உக்ரைன், ரஷ்யாவின் பதற்றமான போர் சூழல்: சீனத் தூதரிடம் ரஷ்ய அமைச்சர் கூறிய முக்கிய விடயம்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர கடுமையான் தடைகள் இருப்பதாக, ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாலவ்ரோவ் சீனாவின் தூதரிடம் தெரிவித்துள்ளார்.
பதற்றமான சூழல்
ரஷ்யா - உக்ரைன் போர் ஓர் ஆண்டை கடந்து நீடித்து வரும் நிலையில், இந்த போரானது மிக நீண்ட காலத்திற்கு தொடரலாம் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் கூறினார்.
அதற்கேற்ப வாக்னர் படை பாக்முட் நகரை கைப்பற்றியதாக அறிவித்தது. அணுமின் நிலையங்களை தாக்க திட்டமிட்டதாக இரண்டு உக்ரேனியர்களை கைது செய்ததாக ரஷ்யா அண்மையில் கூறியது.
REUTERS
சீனத் தூதர் மற்றும் ரஷ்ய அமைச்சர் சந்திப்பு
இந்த நிலையில் சீனாவின் சிறப்பு தூதரான லீ ஹுய் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வை சந்தித்தார். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளை குற்றம்சாட்டிய செர்ஜி, போர் தொடர்பில் அமைதிப்பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்கு கடுமையான தடைகள் இருப்பதாகக் கூறினார்.
REUTERS
மேலும் இதுதொடர்பில் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மோதலின் அரசியல் - இராஜதந்திர தீர்வுக்கான மாஸ்கோவின் உறுதிப்பாட்டை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ரஷ்யா-சீன வெளியுறவுக் கொள்கை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இது பிராந்தியத்திலும், ஒட்டுமொத்த கிரகத்திலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
REUTERS