ரஷ்யா-உக்ரைன் போர் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்: புடின் தரப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், போர் பல ஆண்டுகள் நீடிக்கும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் போர்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்யா உக்ரைன் நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது.
இந்த நிலையில் போருக்கு எதிராக உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஜீ 7 மாநாட்டில் போரில் அபாயம் குறித்து கலந்துரையாடிய அத்தலைவர்கள் போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யாவின் நட்பு நாடான சீனா உதவ வேண்டும் என ஜீ 7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
@reuters
ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் படை பாக்மூட் நகரை கைப்பற்றியதாக அறிவித்தது. மேலும் அந்நகர் கைப்பற்றிய பின்பு ரஷ்ய ராணுவம் அந்நகரை சூறையாடியது.
தற்போது ரஷ்ய ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம், உக்ரைனின் தலைநகரை கிய்வ் நகரை மீது தொடர் தாக்குதலை நடத்துகிறது. இதனிடையே ரஷ்யாவின் தெற்கு நகரமான கிராஸ்னோடரில் போர் நேற்று இரவு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போர் நீடிக்கும்
இதனிடையே உக்ரைன் போர் தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருவதோடு, ரஷ்யா மீதான பொருளாதார தடையை தொடர்ந்து அமல் படுத்தி வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.
@ap
இந்நிலையில் வியட்நாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவர் டிமிட்ரி மெட்வடேவிடம், உக்ரைன் போர் நிலவரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு பதிலளித்து பேசிய அவர் ‘உக்ரைன் போர் மிக நீண்ட காலத்துக்கு நீடிக்கலாம் என்றும் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் மீண்டும் தொடரலாம்' எனவும் கூறியுள்ளார்.
@skynews
கடந்த 15 மாதங்களுக்கு மேலாக உக்ரைனின் போர் தொடர்வதால், உலக நாடுகள் பலவும் பொருளாதார சிக்கலை சந்தித்துள்ளது. மேலும் பிரித்தானியாவின் முக்கிய உணவு ஏற்றுமதி நாடான உக்ரைனில் போர் தொடர்வதால் அங்கே உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.