உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்: ஜெலென்ஸ்கி வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ
உக்ரைனின் முக்கிய நகரான டின்ப்ரோவில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில், மருத்துவமனை கட்டிடம் சிதைந்து போன வீடியோவை ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் சூழலில், ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துகிறது.
இந்த தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்களான கிய்வ், டின்ப்ரோ போன்ற நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
@telegram
இந்நிலையில் ரஷ்யா கடந்த மே 25ஆம் திகதி நள்ளிரவில், ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் டினிப்ரோ நகரின் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோ
இந்த தாக்குதலில் டின்ப்ரோ நகரிலுள்ள ஒரு மருத்துவமனையும், அருகே இருந்த கால்நடை மருத்துவமனையும் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் இடிபாடுகளுக்கு உள்ளாகியுள்ளது.
@telegram
இந்த இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 15 பேருக்கு மேல் படுகாயம் அடைந்திருப்பதாகவும், மேலும் மருத்துவமனையிலிருந்த நோயாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Another ?? missile attack, another crime against humanity as such. The buildings of a psychological clinic and a veterinary clinic in the city of Dnipro were destroyed. As of now, one person was killed and 15 were wounded. The shelling aftermath is being eliminated and the… pic.twitter.com/D0bYBPByjn
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 26, 2023
மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டு ‘ரஷ்யா மனித நேயமற்று செயல்படுகிறது, நோயாளிகள் சிகிச்சை பெரும் மருத்துவமனையை தாக்கி, தன் வீரத்தை வெளிப்படுத்துகிறது, இதில் போருக்கான அறம் எங்கே இருக்கிறது? தீவிரவாதிகளை போல் ரஷ்யா செயல்படுகிறது.’
’உலக நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும், அப்போது தான் உக்ரைனை காப்பாற்ற முடியும்’ என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
மேலும் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்து வரும் உலக நாடுகளுக்கு நன்றி, என ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.