மழைக்கு ஒதுங்கிய பெண்ணுக்கு கிடைத்த ரூ.1.22 கோடி பரிசு
மழைக்கு ஒதுங்கிய பெண்ணிற்கு ரூ.1.22 கோடி லொட்டரி பரிசு கிடைத்துள்ளது.
மழையால் கிடைத்த அதிர்ஷ்டம்
தென்மேற்கு சீனாவின் Yunnan மாகாணத்தின், ஹோங்டா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி மழை பெய்துள்ளது.
அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர், மழை காரணமாக அருகே இருந்த லொட்டரி கடையின் உள்ளே ஒதுங்கியுள்ளார்.
அப்போது அந்த கடைக்காரரிடம், நான் மழையால் சிக்கியுள்ளேன். இங்கே ஸ்கிராட்ச் கார்டுகள் உள்ளதா, நான் விளையாட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இங்கு வாராந்திர அல்லது தினசரி லொட்டரிகளை போல் இல்லாமல், உடனடியாக பணம் செலுத்தி, உடனடியாக பரிசு வெல்லும் ஸ்கிராட்ச் கார்டுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரூ.1.24 கோடி பரிசு
உடனடியாக 30 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.364) மதிப்பிலான 30 லொட்டரி டிக்கெட்கள் உள்ள 900 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,942) மதிப்பிலான ஒரு முழு சிறு புத்தகத்தையும் அந்த பெண் வாங்கியுள்ளார்.
இதில், 6வது லொட்டரி டிக்கெட்டிலே ஒரு மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1.24 கோடி) பரிசு வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து பேசிய அந்த பெண், "எப்போதாவது லொட்டரி ஸ்கிராட்ச் கார்டுகள் வாங்குவேன். மதிய உணவு முடித்ததும் மழை பெய்ய துவங்கிய போது லொட்டரி வாங்கினேன்.
இந்த பரிசு தொகையில் குறிப்பிட்ட அளவு பணத்தை, பட்டு துணியால் ஆன உறையில் வைத்து அந்த கடை உரிமையாளருக்கு வழங்கியுள்ளார்.
இதனை நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. ஒருவேளை தண்ணீர் செழிப்பை கொண்டு வருவதாக இருக்கலாம்.
சிலர் 5 அல்லது 10 மில்லியன் லொட்டரி வெல்வதை பார்த்திருக்கேன். அதனை ஒப்பிடும் போது இது பெரிய விடயம் இல்லை.
இதனை நான் சமூகவலைத்தளங்களில் பகிர விரும்பவில்லை. இதன் காரணமாக நான் சோம்பேறியாக வீட்டில் படுக்க விரும்பவில்லை. நான் வழக்கம் போல் பணிக்கு திரும்பிவிட்டேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |