33 மூத்த அதிகாரிகளை பதவிநீக்கம் செய்த சீன ஜனாதிபதி
China expels 33 senior officials, including 16 military figures: சீனா, 33 மூத்த அதிகாரிகளை பதவிநீக்கம் செய்துள்ளது.
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, 33 மூத்த அதிகாரிகளை பதவிநீக்கம் செய்துள்ளது.
மூத்த அதிகாரிகளை பதவிநீக்கம் செய்த சீன ஜனாதிபதி
அரசில் முக்கியப் பங்கு வகித்த 33 அதிகாரிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 16 பேர் ராணுவத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஆவர்.

ஆக, இப்போது ராணுவ கமிஷனில் இரண்டு பேர் மட்டுமே போறுப்பு வகிக்கிறார்கள். ஒருவர், ராணுவ கமிஷனின் தலைவர், ஜனாதிபதியான ஜி ஜின்பிங், இன்னொருவர், துணைத்தலைவரான ஜாங் செங்மின்!
அதாவது, 2027இல் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். தலைவரைத் தேர்ந்தெடுப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் வேலை.
ஆக, மீண்டும் கட்சியின் தலைவராக, அதாவது, இன்னொரு வகையில் கூறினால், சீனாவின் ஜனாதிபதியாக, நான்காவது முறையாக பொறுப்பேற்க முடிவு செய்துள்ளார் ஜி ஜின்பிங்.
அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கும் நிலையில், மீண்டும் சீனாவின் ஜனாதிபதியாவார். ஆக, சரியாக அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் 33 மூத்த அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், ஜி ஜின்பிங் மீண்டும் ஜனாதிபதியாவாரானால், 15 ஆண்டுகளுக்கு மேல் சீனாவை ஆட்சி செய்யும் தலைவர் என்னும் பெருமை அவருக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.