ஒரே கட்டிடத்தில் வசிக்கும் 20,000 மக்கள்: 675 அடி உயர சீன செங்குத்து நகரம்: சிறப்பு பார்வை

China Viral Photos
By Thiru Aug 14, 2026 07:56 AM GMT
Report

சீனாவில் ஒரே கட்டிடத்தில் 20,000 மக்கள் வசிக்கும் 675 அடி உயர செங்குத்து நகரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

675 அடி உயர செங்குத்து நகரம்

நீங்கள் உங்களுடைய வீட்டு வாசலில் இருந்து இறங்கிய உடனே உங்களுக்கான மளிகை கடை, உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், இன்டர்நெட் காஃபி ஷாப்கள் ஆகியவை இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

கேட்பதற்கே ஆச்சரியமாக தோன்றும் இந்த வாழ்க்கையை சீனாவின் ஹாங்சூ(Hangzhou) நகரில் அமைந்துள்ள ரீஜெண்ட் இன்டர்நேஷனல் சென்டரில்(Regent International Center) வசித்து வரும் 20,000 மக்கள் தினம் தினமும் அனுபவித்து வருகின்றனர்.

ஒரே கட்டிடத்தில் வசிக்கும் 20,000 மக்கள்: 675 அடி உயர சீன செங்குத்து நகரம்: சிறப்பு பார்வை | Chinas 675 Foot Vertical City Housing 20K People

2013ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த 675 அடி உயர செங்குத்து நகரம் 39 தளங்களை கொண்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட கட்டிடம் நவீன கால கட்டடக் கலையின் அடையாளமாக திகழ்வதோடு, நகர்புற மக்கள் தொகையின் எல்லைகளை மீறி தனக்குள்ளே ஒரு நவீன கால நகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஜெண்ட் இன்டர்நேஷனல் சென்டர் கட்டிடத்தை சிங்கப்பூரின் புகழ் பெற்ற மரீனா பே சாண்ட்ஸ் கட்டிடத்தை வடிவமைத்த அலிசியா லூ என்பவர் வடிவமைத்துள்ளார்.

முடி திருத்தும் கடைகள் முதல் திரையரங்கம் வரை இங்கே இருப்பதால் இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய தேவையே இல்லை.

பல ஆண்டுகளாக இந்த கட்டிடம் ஹாங்சூவின் இன்ஃப்ளூயன்ஸர் கட்டிடம் என்று அழைக்கப்பட்டது. காரணம் இது கன்டென்ட் கிரியேட்டர்களின் முக்கிய மையமாக திகழ்வதே காரணம்.

ஹார்முஸ் நீரிணையில் 2 வணிக கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஈரான்: UAE கடும் கண்டனம்

ஹார்முஸ் நீரிணையில் 2 வணிக கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஈரான்: UAE கடும் கண்டனம்

ஒரே கட்டிடத்தில் வசிக்கும் 20,000 மக்கள்: 675 அடி உயர சீன செங்குத்து நகரம்: சிறப்பு பார்வை | Chinas 675 Foot Vertical City Housing 20K People

குடியிருப்பாளர்களின் கள யதார்த்தம்

அனைத்து வசதிகளும் ஜெண்ட் இன்டர்நேஷனல் சென்டரில் இருந்தாலும், இடவசதி என்பது குடியிருப்பாளர்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

நடுத்தர அளவிலான இடங்கள் சிறிய தனித்தனி குடியிருப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இது நெரிசலையும், பாதுகாப்பு கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெண்ட் இன்டர்நேஷனல் சென்டரில் சிறிய மற்றும் காற்றுப்புகாத ஜன்னல் இல்லாத யூனிட்டுகளின் மாத வாடகை சுமார் 1,500 RMB (சுமார் £167.58) ஆகும். அதே வெளிப்புற அழகிய காட்சிகள் கொண்ட பால்கனி யூனிட்டுகளின் மாத வாடகை 4,000 RMB (சுமார் £446.88) ஆகும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US