ஜூலை 15: Cyberspace ID மூலம் Online உலகையே கட்டுப்படுத்த திட்டமிடும் சீனா
ஜூலை 15-ஆம் திகதி சீனா Cyberspace ID-ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் உலகையே கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சீனாவில் 1.1 பில்லியன் இணைய பயனாளர்களும், கோடிக்கணக்கான முகமூடி கண்காணிப்பு கமெராக்களும் இருப்பதால், உலகின் மிகப்பாரிய அளவிலான தரவுகளை இந்த நாடு உருவாக்குகிறது.
இந்த தரவுகள், ட்ரோன், தானியங்கி வாகனங்கள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளால் மிகப்பாரிய மூலதனமாக மாறியுள்ளன.
இந்நிலையில், ஜூலை 15, 2025 அன்று சீன அரசு புதிய “Cyberspace ID” என்ற தேசிய டிஜிட்டல் அடையாள திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இது அனைத்து ஓன்லைன் செயல்பாடுகளுக்கும் ஒரே அடையாள எண்ணைக் கொண்டு நுழையும் முறையை அமுல்படுத்தும்.
Cyberspace ID எப்படி வேலை செய்கிறது?
இந்த திட்டத்தில் பங்கேற்க, பயனாளர்கள் அரசு செயலியை பதிவிறக்கம் செய்து, தங்கள் தேசிய அடையாள அட்டை, முக ஸ்கேன் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அதற்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட இணைய எண் (unique web number) மற்றும் டிஜிட்டல் சான்றிதழ் (digital certificate) வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி அனைத்து ஓன்லைன் தளங்களிலும் நுழையலாம்.
ஆபத்தான பக்கவிளைவுகள்
அதிகாரிகள் இதை விருப்ப அடிப்படையிலானதாகக் கூறினாலும், விமர்சகர்கள் இது கட்டாயமாக மாறி, முற்றிலும் கண்காணிக்கப்படும் இணைய சூழலாக மாறும் எனக் கவலை தெரிவிக்கின்றனர்.
இது அனாமதேய தன்மை முடிவுக்கு வரக்கூடும் என்றும், அரசுக்கே ஓன்லைன் செயல்களில் முழு கட்டுப்பாடு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இத்திட்டம் சீன அரசின் பொதுமக்களுக்கான கண்காணிப்பு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த அளவிலான தரவுகளை ஒரே இடத்தில் சேமிப்பது பாதுகாப்பு மீறல் அபாயங்களையும் ஏற்படுத்தும் என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China Cyberspace ID 2025, Chinese digital ID system, China online surveillance, Xi Jinping data control, July 15 Cyberspace ID launch, China facial recognition ID, Digital identity China, Chinese censorship and privacy