வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முன்னாள் சீன ஜனாதிபதி: பரபரப்பு வீடியோ ஆதாரம்
சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஹூ ஜின்டாவோ காங்கிரஸ் நிறைவு விழாவில் இருந்து வெளியேற்றம்.
ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் வரலாற்று அதிகாரத்தை கைப்பற்றுவதை எதிர்த்தாரா என்பது போன்ற விவாதங்கள் அதிகரிப்பு.
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் நிறைவு விழாவில் இருந்து முன்னாள் ஜனாதிபதி ஹூ ஜின்டாவோ (Hu Jintao) வெளியேற்றப்பட்டார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் (Xi Jinping) முன்னோடியாக முன்னாள் ஜனாதிபதி ஹூ ஜின்டாவோ கருதப்படுகிறார்.
இத்தகைய நிலையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் நிறைவு விழாவில் ஜி ஜின்பிங்கின் இடது புறம் அமர்ந்து இருந்த 79 வயதான ஹூ ஜின்டாவோ வெளியேற்றப்பட்டுள்ளார்.
Former Chinese leader Hu Jintao taken out of the Chinese Party Congress — apparently against his will. What happened? Hu was China’s top official before Xi. Did he oppose Xi’s historic power grab?
— Frida Ghitis (@FridaGhitis) October 22, 2022
CNN reporting on the incident censored in Chinapic.twitter.com/snl7lUhK9P
பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள் ஆடிட்டோரியத்தின் மேடையில் இருந்து, இரண்டு உதவி அதிகாரிகள் ஹூ ஜின்டாவோவை (Hu Jintao) அழைத்துச் சென்றனர்.
முதலில் ஹூ ஜின்டாவோவை உதவியாளர்கள் அழைத்தபோது, அவர் சிறிது குழப்பத்துடன் எழுந்து பின், தான் வெளியேற்றப்படுவதை எதிர்த்து மீண்டும் தன் இருக்கைக்கு திரும்ப செல்ல முற்பட்டார், இருப்பினும் உதவியாளர்கள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.
அப்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் சில வார்த்தைகள் பேசினார், அத்துடன் பிரீமியர் லீ கெகியாங்கின் தோளில் தட்டி விட்டு சென்றார்.
Sky news
ஹூ ஜின்டாவோ கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸின் தொடக்க விழாவின் அதே மேடையில் சற்று நிலையற்றவராக காணப்பட்டார்.
இந்த விழாவில் சீனாவின் தலைவராக ஜி ஜின்பிங் அந்தஸ்தை மேலும் உயர்த்தக்கூடிய கட்சியின் அரசியலமைப்பு திருத்தத்திற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தலைவராக நியமிக்கப்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
Sky news
இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி ஹூ ஜின்டாவோ எதற்காக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் என்று காரணம் தெரியவில்லை.
கூடுதல் செய்திகளுக்கு: மிரண்டு போன பேஸ்ட்மேன்…சூப்பர்மேன் கேட்ச் எடுத்த நியூசிலாந்து வீரர்: பிரமிப்பான வீடியோ
ஒருவேளை அவர் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் வரலாற்று அதிகாரத்தை கைப்பற்றுவதை எதிர்த்தாரா என்பது போன்ற விவாதங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளது.