மிரண்டு போன பேட்ஸ்மேன்…சூப்பர்மேன் கேட்ச் எடுத்த நியூசிலாந்து வீரர்: பிரமிப்பான வீடியோ
டி-20 உலக கோப்பையில் சூப்பர் 12 ஆட்டத்தில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
'கேட்ச் ஆஃப் தி டோர்னமென்ட்' என்று நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸுக்கு பாராட்டு.
டி-20 உலக கோப்பையில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸின்(Glenn Phillips) அற்புதமான சூப்பர்மேன் கேட்ச் ஒன்று கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
டி-20 உலக கோப்பை போட்டியில் முதல் சூப்பர் 12 ஆட்டத்தில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், டெவோன் கான்வே-யின் ஆட்டமிழக்காத அற்புதமான 92 ஓட்டங்களால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 200 ஓட்டங்கள் சேர்த்தது.
First super 12 match and we might just have seen the Catch of the Tournament already! ?
— Amey Deshpande (@SportsZealot07) October 22, 2022
Glenn Phillips is a madman!#AUSvNZ #T20WorldCuppic.twitter.com/qMca164DAe
201 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 111 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
நியூசிலாந்து அணியின் இந்த சிறப்பான வெற்றிக்கு அந்த அணியின் மிகச் சிறப்பான பில்டிங்கே காரணம் என கூறப்பட்டு வருகிறது.
அதிலும் ஆட்டத்தில் ஒன்பதாவது ஓவரில் மிட்செல் சான்ட்னர் வீசிய பந்தில் ஆபத்தான மார்கஸ் ஸ்டோனிஸை அகற்றுவதற்காக நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸின் அற்புதமான சூப்பர்மேன் கேட்ச் ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பெண்ணை எதிர்பார்த்து காத்து இருந்தேன்… இளவரசி சார்லோட் குறித்த மன்னர் சார்லஸின் எதிர்கால ஆசை
இந்த தொடரில் இனி எத்தனை சிறப்பான கேட்ச்கள் இடம்பெற்றாலும் கிளென் பிலிப்ஸ் டைவ் செய்து எடுத்த கேட்ச் நீண்ட காலத்திற்கு நினைவில் வைக்கப்படும் அளவிற்கு ஏற்கனவே 'கேட்ச் ஆஃப் தி டோர்னமென்ட்' என்று புகழப்படுகிறது.