சீனாவின் அணு ஆயுத ரகசியங்களை அமெரிக்காவிற்கு கசியவிட்டதாக இராணுவ உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டு
சீனாவின் மிக உயர்ந்த இராணுவ அதிகாரியான ஜெனரல் ஜாங் யூஷியா (Zhang Youxia) மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அவர் அமெரிக்காவிற்கு சீனாவின் அணு ஆயுத திட்டம் தொடர்பான முக்கிய தொழில்நுட்ப ரகசியங்களை கசிய விட்டதாகவும், அதற்குப் பதிலாக அதிகார பதவி உயர்வுகள் மற்றும் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சகம் ஜாங் மீது கடுமையான “கட்சிக் கட்டுப்பாடு மற்றும் சட்ட மீறல்கள்” தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட தகவலின்படி, ஜாங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மத்திய இராணுவ ஆணையத்தில் அரசியல் குழுக்களை உருவாக்கினார்.
அவர் இராணுவ கொள்முதல் அமைப்பில் பதவி உயர்வுகளுக்காக பெரும் தொகை லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சீன தேசிய அணு நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கு ஜுன் மீதும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த குற்றச்சாட்டு, சீன இராணுவத்தில் உள்ளக ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து உலகளவில் கவலை எழுப்பியுள்ளது.
ஜாங் யூஷியா, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் நெருங்கிய கூட்டாளி என கருதப்பட்டவர் என்பதால், இந்த விசாரணை சீனாவின் அதிகார அமைப்பில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் உயர்பதவி ஜெனரல் மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு, உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China general nuclear secrets leak, Zhang Yuxia accused espionage US, Chinese military corruption scandal, Nuclear weapons secrets China to US, China top general investigation 2026, Communist Party anti-corruption probe, Military promotions bribery China, US-China espionage latest news, Chinese defense ministry investigation