இரகசியமாக தங்கத்தை வாங்கிக் குவிக்கும் சீனா
சீனாவின் மத்திய வங்கி மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத அளவில் பெருமளவு தங்கம் வாங்கி வருவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த ரகசிய கொள்முதல் நடவடிக்கைகள், உலக தங்க சந்தையில் சாதனை உயர்வை ஏற்படுத்தியுள்ளன.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, சீனாவின் மத்திய வங்கி (PBOC) இந்த ஆண்டு 25 டன் தங்கம் மட்டுமே வாங்கியதாக அறிவித்துள்ளது.
ஆனால், உண்மையில் 250 டன் வரை வாங்கியிருக்கலாம் என Societe Generale நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது உலக மத்திய வங்கிகளின் மொத்த தங்கக் கொள்முதல் அளவில் மூன்றில் ஒரு பங்காகும்.

சந்தை வல்லுநர்கள், சீனாவின் தங்கக் கொள்முதல் அமெரிக்க டொலரிலிருந்து விலகும் (de-dollarisation) முயற்சியின் ஒரு பகுதியாகும் எனக் கூறுகின்றனர்.
“எண்ணெய் போல தங்கத்தை செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க முடியாது. யார் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பதை அறிய இயலாது” என Carlyle நிறுவனத்தின் Jeff Currie கூறியுள்ளார்.
Japan Bullion Market Association-ன் இயக்குநர் Bruce Ikemizu, சீனாவின் உண்மையான தங்கக் கையிருப்பு 5,000 டன் இருக்கலாம் என மதிப்பிடுகிறார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அளவவை விட இரட்டிப்பு அளவாகும்.
தங்க விலை தற்போது ஒரு அவுன்ஸுக்கு 4,300 அமெரிக்க டொலரை கடந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், அமெரிக்காவைத் தவிர உலக மத்திய வங்கிகளின் கையிருப்பில் தங்கத்தின் பங்கு 10 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சீனாவின் Sovereign Wealth Fund (CIC), இராணுவம் மற்றும் Safe (State Administration of Foreign Exchange) ஆகியவை தங்கம் வாங்கும் முக்கிய அமைப்புகளாக உள்ளன. ஆனால், இவை அனைத்தும் தங்களின் கையிருப்பை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்த ரகசிய கொள்முதல் நடவடிக்கைகள், உலக தங்க சந்தையை மேலும் சிக்கலாக்கி, விலை முன்னறிவிப்பை கடினமாக்கியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China secret gold purchases 2025, PBOC hidden gold reserves, China de-dollarisation strategy, Global gold rally record highs, Jeff Currie Carlyle gold analysis, Bruce Ikemizu gold reserve estimate, Sovereign Wealth Fund CIC gold buy, SAFE China gold accumulation, Gold price 4300 dollars per ounce, Central banks gold holdings surge