ரகசியமாக பாலைவன விமான தளத்தை உருவாக்கிவரும் சீனா
China builds secret desert airbase: சீனா ரகசிய பாலைவன விமான தளத்தை உருவாக்கிவருகிறது.
பாலைவனப் பகுதியில் விமான சோதனை தளம்
சீனா தனது மேற்கு பாலைவனப் பகுதியில் உள்ள லோப் நூர் விமான சோதனைத் தளத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
செயற்கைக்கோள் படங்களில், அங்கு நான்கு பெரிய ஹேங்கர்கள், புதிய டாக்ஸிவேக்கள், வட்ட வடிவ சோதனை மேடை, எரிபொருள் சேமிப்பு வசதிகள் ஆகியவை கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விரிவாக்கம், சீனாவின் அடுத்த தலைமுறை போர் விமான திட்டங்களை வேகமாக முன்னெடுக்க உதவுகிறது.
2025 ஆகஸ்டில், J-36 எனப்படும் ஆறாம் தலைமுறை போர் விமானம் முதன்முதலில் இங்கு கண்டறியப்பட்டது. அதற்கு 17 நாட்கள் கழித்து, J-XDS அல்லது J-50 எனப்படும் மற்றொரு புதிய விமானமும் இங்கு சோதனைக்காக வந்தது.
2026 பிப்ரவரி மாதத்திற்குள், இந்த தளம் 60,000 சதுர அடிகள் ஹேங்கர் இடம் மற்றும் 3,00,000 சதுர அடிகள் கூடுதல் வசதிகள் பெற்றது. இதனால் தளத்தின் அளவு இரட்டிப்பு ஆனது. லோப் நூர் தளம், 5 கி.மீ நீள ரன்வே கொண்டது.
பாலைவனப் பகுதியில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், இங்கு ரகசிய சோதனைகள் எளிதாக நடத்தப்படுகின்றன. இதனால் சீனாவுக்கு சோதனை வேகத்தை அதிகரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், இந்த விரிவாக்கம் H-20 எனப்படும் ரகசிய ஸ்டெல்த் பாம்பர் திட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற ஊகமும் எழுந்துள்ளது.
புதிய ஹேங்கர்கள், H-6 பாம்பர் போன்ற பெரிய விமானங்களையும் தாங்கக்கூடிய அளவில் உள்ளன. சீனா தற்போது ஷென்யாங் பகுதியில் 40 லட்சம் சதுர அடிகள் கொண்ட புதிய உற்பத்தி வளாகம் அமைத்து வருகிறது.
இது சீனாவின் அடுத்த தலைமுறை வான்படை ஆற்றலை உருவாக்கும் மிகப்பெரிய முயற்சியாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவுடன் போட்டியிட, சீனா 2035-க்குள் இந்த புதிய போர் விமானங்களை செயல்படுத்தும் திட்டத்தில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |