ஜப்பான் பயணங்களை தவிர்க்க வேண்டும்! குடிமக்களை எச்சரித்த சீனா: ஏன் தெரியுமா?
ஜப்பான் செல்லும் விமானங்களின் விமான நிறுவனம் பயணிகளின் டிக்கெட் தொகை திருப்பி அளித்துள்ளது.
ஜப்பான் - சீனா இராஜந்திர மோதல்
சீனாவின் முக்கியமான விமான நிறுவனங்கள், சனிக்கிழமை ஜப்பானுக்கு செல்லும் விமானத்தை நிறுத்தி வைத்ததுடன், எடுக்கப்பட்ட டிக்கெட்டிற்கான தொகையை திருப்பி வழங்கியுள்ளது.
இந்த திடீர் முடிவு, ஜப்பானுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு சீன அரசாங்கம் தங்கள் நாட்டு குடிமக்களை கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனா - ஜப்பான் இடையே ஏற்பட்டுள்ள இராஜதந்திர மோதல், இருநாடுகளுக்கு இடையிலான விமர்சன பறிமாற்றத்திற்கு பிறகு மேலும் தீவிரமடைந்துள்ளது.
இராஜதந்திர மோதலுக்கான காரணம்
தைவானை சீனா தங்களின் நாட்டின் ஒரு அங்கமாக கருதி வரும் நிலையில், தைவான் குறித்த உணர்வு பூர்வமான விவகாரத்தில் ஜப்பான் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதலின் தொடக்க புள்ளியாக அமைந்துள்ளது.
அறிக்கையில் உள்ள ஜப்பானின் கருத்துகளுக்கு சீனா கடுமையான எதிர்வினை ஆற்றி உள்ளதுடன், ஜப்பான் பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வ எச்சரிக்கையையும் விடுக்க வழிவகுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |