6 மாதங்கள் விண்வெளி பயணம்.. பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்!
சீனாவின் விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனர்.
டியான்காங் என்ற தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. இதற்காக 3 விண்வெளி வீரர்களை அனுப்பி வைத்தது.
ஆறு மாத காலம் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்ட விண்வெளி வீரர்கள் மூவரும், சீனாவின் மங்கோலியப் பகுதியில் பத்திரமாக தரை இறங்கினர். அவர்கள் 183 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளதால், சீனா இதுவரை விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய திட்டங்களில் இதுவே மிக நீண்ட கால திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீரர்கள் சென்ஸு-13 விண்கலம் மூலம் கடந்த அக்டோபர் 16ஆம் திகதி விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர். 8வது முறையாக மனிதர்களை சீனா விண்வெளிக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.