வெளிநாடொன்றில் 100க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ள சீன கோடீஸ்வரர்
அமெரிக்காவில் வாடகைத் தாய் முகமைகள் மூலம் சீன கோடீஸ்வரர் ஒருவர் 100க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பதினொரு பிள்ளைகள்
சீனாவின் ஒன்லைன் கேமிங் நிறுவனமான டூயோயின் நிறுவனர் 48 வயதான சூ போ. இவர் தன்னை சீனாவின் முதல் தந்தை என்று அழைத்துக் கொள்கிறார்.

சமூக ஊடகங்களில் வெளியானப் பதிவுகளின் அடிப்படையில், குறைந்தது 50 உயர்தர மகன்களை உருவாக்குவது என்ற தனது நோக்கத்தைப் பற்றி அவர் பேசியுள்ளார்.
சூவின் முன்னாள் காதலி டாங் ஜிங் தெரிவிக்கையில், சூ 300க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு தந்தையாக இருக்கலாம் என்றும், அவர்களில் பதினொரு பிள்ளைகளை தாம் பல ஆண்டுகளாக வளர்த்ததாகவும் கூறிய நிலையிலேயே சூ தொடர்பான சமூக ஊடகப் பதிவு கவனம் பெற்றுள்ளது.
New York Post வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க கோடீஸ்வரரும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலோன் மஸ்க்கால் சூ ஈர்க்கப்பட்டுள்ளார், அவர் தனது வம்சாவளியை விரிவுபடுத்துவதற்காக தனது நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுக்கு விந்தணுக்களை ரகசியமாக வழங்குவதாக எழுந்த குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
ஆண் பிள்ளைகளைப் பெற்றெடுக்க
தனது பிள்ளைகள் ஒரு நாள் மஸ்க்கின் பிள்ளைகளை மணப்பார்கள் என்ற நம்பிக்கையைப் பற்றி சூ எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், 2023 ஆம் ஆண்டு கலிபோர்னியா நீதிமன்றத்தில் சூ தெரிவிக்கையில்,
அமெரிக்காவில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு, குறிப்பாக ஆண் பிள்ளைகளைப் பெற்றெடுக்க விரும்புவதாகவும், அவர்கள் இறுதியில் தனது தொழிலைக் கைப்பற்றுவார்கள் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

சூ மற்றும் அவரது முன்னாள் காதலி டாங் தற்போது தங்களின் இரண்டு மகள்கள் தொடர்பான உரிமை கோரல் மோதலில் ஈடுபட்டுள்ளனர். தனது முன்னாள் காதலி பல ஆண்டுகளாகச் செலவிட்ட தொகைகளுக்கு மில்லியன் கணக்கான டொலர்களை கடன்பட்டிருப்பதாக சூ கூறியுள்ளார்.
இருப்பினும், அவர் பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த முன்னாள் காதலியின் கூற்றுகளுக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை.
சூவின் பல குழந்தைகள் கலிபோர்னியாவின் இர்வினில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருவதாகவும், அவர்கள் பராமரிப்பாளர்களால் வளர்க்கப்படுவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |