காதலன் கேட்டதற்காக அடித்துக்கொன்ற காதலி! 11 ஆண்டுகள் சிறை
சீனாவில் காதலன் கேட்டதற்காக தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டதால், பெண்ணிற்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
துரோகம் செய்துவிட்டதாக
ஷாங்க்சி மாகாணத்தின் தலைநகர் தையுவானில் அஜூவான், அகியாங் என்று அழைப்படும் காதலர்கள் ஒன்றாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அகியாங் தவறான பெண்கள் தொடர்பில் இருந்ததால் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, காதலி அஜூவான் அவரிடம் பலமுறை பிரிந்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால், அகியாங் அவரை சமாதானப்படுத்த முயற்சித்து தன்னுடனே தங்கும்படி கெஞ்சியிருக்கிறார். மேலும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
உயிரிழந்த காதலன்
கடந்த ஜூன் 5ஆம் திகதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது பிரிந்து செல்வதாக மீண்டும் அஜூவான் கூற, அகியாங் தனது தலையை சுவரில் மோதியதால் வாய், மூக்கில் இருந்து இரத்தம் வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஏன் என்னை நீ அடிக்கவில்லை? என்று கேட்ட அகியாங், தன்னை பிரிவதற்கு பதில் தாக்கி காயப்படுத்திவிடு என்று காதலியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அகியாங்கின் தலையைப் பிடித்து நான்கு அல்லது ஐந்து முறை சுவரில் மோத செய்துள்ளார் அஜூவான்.
இதில் சுயநினைவை இழந்து சரிந்து விழுந்த அகியாங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார்.
11 ஆண்டுகள் சிறைத்தண்டனை
இதுதொடர்பில் கைது செய்யப்பட்ட அஜூவானுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார்.
என்றாலும் ஷாங்க்சி மாகாண உயர் நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது. மேலும், அஜூவான் காவலில் இருந்தபோது, தன்னுடன் இருந்த நபருடன் மோதலில் ஈடுபட்டதால் லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து சமூக ஊடக வலைத்தளங்களில் பரவலான விவாதங்கள் தூண்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |